நுவரெலியா மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா – நல்லதண்ணீர் பிரதான போக்குவரத்து வீதி கடந்த
14 நாட்களாக மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இந்த மாதம் முதலாம் திகதி பெய்த மழை காரணமாக மஸ்கெலிய – நல்லத்தண்ணீர் பிரதான வீதியில், மோகினி எல்லைப்பகுதியில்
ஏற்பட்ட மண்சரிவுக்காரணமாக பிரதான வீதி முழுமையாக மண்ணால் நிரம்பியுள்ளது.
இதன் காரணமாக இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் இந்த மண்மேட்டின் ஊடாக நடந்து பயணிப்பதும்
ஆபத்தானதாக காணப்படுகின்றது.
இதனால் இந்த பகுதியில் வாழும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் பெரும்
சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்தும் இந்த பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.