மாணவர் ஓய்வு நிழல் குடை- கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் திறந்து வைப்பு

0
157

அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவர்களுக்காக, பெற்றோரினால் அமைக்கப்பட்ட கல்லாசனங்களுடன் கூடிய
ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின்போதே, ஓய்வு நிழல் குடை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக, மௌலவி எஸ்.எம்.நிம்ஸாத், பாடசாலை பிரதி அதிபர் ஏ.எஸ். சலாம் உட்பட நலன் விரும்பிகள் என பலர்
கலந்துகொண்டனர்.