மாவீரர் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் வவுணதீவு மற்றும் வாழைச்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 7 பேரும் 72 மணிநேரம் காவல்துறையினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவீரர் நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தினை அலங்கரித்த கொடிகள், கம்பங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சென்ற நான்கு பேர் நேற்று முன்தினம் தரவை பகுதியில் வைத்து வாழைச்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் காவல்நிலையத்திற்கு முன்பாக விளக்கேற்றிய இருவர் உட்பட மூன்று பேரை வவுணத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த 7 பேரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.