குருணாகல் பன்னல மாஓயா காட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, மா ஓயாவின் கரைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், மணல் மற்றும் களிமண் அகழ்ந்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.
யோகியான, சந்தலங்காவ, தங்கொட்டுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 29, 56, 44 வயதுடைய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நான்கு வாகனங்கள், மணல், களிமண் என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் பன்னல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.