கம்பஹா, மினுவாங்கொடை , பத்தன்டுவன பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.