மினுவாங்கொட கொரோனா கொத்தணி: விசாரணைக்கு சட்டமா அதிபர் உத்தரவு

0
190

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி குறித்து விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று தொடர்பான அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார் என ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.