மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பலி!

0
7

வவுனியா – புளியங்குளம் – பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமியொருவர் நேற்றையதினம் உயிரிழந்தார்.

வீட்டுக்கு அருகில் மரமொன்றில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து நீர் இரைக்கும் இயந்திரத்திற்காகப் பொருத்தப்பட்டிருந்த மின்வடத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சிறுமியைச் சிகிச்சைக்காகக் கொண்டுசென்ற போது, வைத்தியசாலைக்கு வரும் முன்னரே உயிரிழந்ததாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைகளுக்காகச் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.