மின்வெட்டு நேரம் தொடர்பான தகவல்!

0
119

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், இதற்கமைய, ஏ முதல் எல், மற்றும் பி முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரவு ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மின்வெட்டு நேரத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமையவே நீண்ட நேர மின்வெட்டை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.