மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பெரும் போராட்டம்

0
213

மியன்மாரில் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டதைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டம் இன்று இடம்பெற்றதுடன் அரச தலைவர் ஆங் சான் சூகியை உடன் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கடும் முழக்கங்கள் வெளியிடப்பட்டதுடன் பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்துக்கு எதிரான போராட்டங்களை அடுத்து மியன்மாரில் இணைய சேவை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 58 ஆம் திகதி நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அதில் மோசடி இடம்பெற்றதாக இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இராணுவ ஆட்சிக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இதேவேளை மியன்மாரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உடல் நலத்துடன் உள்ளார் என அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சி
அறிவித்துள்ளது.