மியன்மார் அரசாங்கம், இலங்கைக்கு, அரிசி நன்கொடை

0
148

மியன்மார் அரசாங்கம், இலங்கைக்கு, ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக, மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம்.பண்டார தெரிவித்துள்ளார்.
யாங்கூனில் உள்ள வர்த்தக துறைமுகத்தில், இந்த அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், இலங்கையுடன் நிலவும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கருத்திற்கொண்டு, நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு, இந்த உதவி மிகவும் முக்கியமானது என, மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம்.பண்டார குறிப்பிட்டுள்ளார்.