மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க மின் உற்பத்தி கப்பல் ஒன்றை நிறுவுவது குறித்து அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இவ்வாறான யோசனை திட்டம் ஒன்றை நிறுவுவதற்கே மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு இதன் மூலம் அனுமதி கோரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மின்சார கட்டணத்தை 15 வீதத்தால் குறைப்பதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு 20 நாட்கள் மாத்திரம் கடந்துள்ள நிலையில் மீண்டும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.