மண்ணெண்ணை இல்லாமை மற்றும் விலையேற்றம் காரணமாக கடந்த பல மாதங்களாக மீனவர்கள் தொழிலை இழந்துள்ள நிலையில் அவர்களுக்கான நஸ்ட ஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கோரிக்கையினை அவர் விடுத்தார்.