முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வீட்டு மின்சார இணைப்பு பயிற்சி

0
118

யாழ். மாவட்டத்தில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான 60 மணி நேர பகுதிநேர வேலைக்கான வீட்டு மின்சார இணைப்பு பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு நேற்று கைதடி தொழிற்பயிற்சி மையத்தில் இடம்பெற்றது.
இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய உதவி பணிப்பாளர் குகநாதன் நிரஞ்சன் கலந்து கொண்டதுடன் 20க்கும் மேற்பட்ட பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை குறித்த பயிற்சிநெறியில் கலந்துகொள்ள விரும்புவோர் உடனடியாக விதாதா அலுவலர்கள் ஊடாகவோ, அல்லது பிரதேச செயலகத்தின் ஊடாக பெயர்களை பதிவு செய்து எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளமுடியும் என பணிப்பாளர் தெரிவித்தார்.