பெற்றோல் விலையை குறைத்ததைப் போன்று முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கும் பெற்றோல் கோட்டாவையும் அதிகரிக்க வேண்டும் என அனைத்து இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணம் குறையுமா என்று தொடர்ச்சியாக கேட்கின்றனர்.
ஆம் நாம் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எனினும் எவ்வளவு தொகை குறைக்கப்படும் என்பதிலேயே சிக்கல் நிலை காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.