அவிசாவளையில் முச்சக்கர வண்டியில் பயணித்த 4பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் தல்துவ குருபஸ்கொட வளைவுக்கு அருகில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துப்பாக்கிச்சூடு நேற்று இரவு இடம்பெற்றதாக 119 க்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் அவிசாவளையில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் ரி 56 துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.