முதியோர்களுடைய அனுபவமானது ஒரு அமுத சுரபியாகும் ஆனால் நவீன உலகத்தில் அவர்கள் மதிக்கப்படுகின்றார்கள்இல்லை என்ன நவமங்கை நிவாசத்தின் இயக்குனர்தெரிவித்தார்,
இன்று நவமங்கை நிவாசத்தில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் இது ஒரு துரதிஸ்டவசமான சம்பவமாகும் முதியோர்களுடைய அனுபவங்கள் பங்களிப்புகள் அவர்கள் சமுதாயத்துக்கு செய்தவைவிழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர்களை பாராட்டுவதற்காகத்தான் உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது
அவர்களுக்கு அன்பு காட்ட பாசம் காட்ட அவர்களுடைய சுகாதாரத் தேவைகளை கவனித்து பூர்த்தியாக்குவதற்காக தான் உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது இன்றைய முதியோர்கள் ஏற்கனவே குடும்பங்களுக்காக பிள்ளைகளுக்காக வாழ்ந்தவர்கள் ஆனால் தற்போது முதியோர்கள் பிள்ளைகளுடன் இணைந்து அவர்களுக்காக வாழ வேண்டிய நிலை காணப்படுகின்றது நான் பல முதியோர்களை பராமரித்திருக்கின்றேன் அவர்கள் கூறுவார்கள் நாங்கள் பிள்ளைகளுக்கு அனைத்தையும் செய்தோம் ஆனால் தற்பொழுது நிம்மதி இல்லை என கூறுகின்றார்கள் ஆனால் பிள்ளைகளுக்காக குடும்பங்களுக்காக வாழ்ந்தவர்கள் இனியாவது உங்களுக்காக வாழ வேண்டும் என கோரிக்கை விடுகின்றேன்என்றார்,