முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குமாறு எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேரிடம் இருந்து உத்தியோகபூர்வ இல்லத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மீள ஒப்படைக்கப்பட்ட 25 முதல் 30 இல்லங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், முன்னுரிமைக்கு ஏற்ப அந்த இல்லங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.