29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் கடற்படைத் தளபதியும் வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநராகவும் உள்ள வசந்த கரனாகொடவிற்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் தளபதியாக பதவிவகித்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுடன் வசந்த கரனாகொடவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாக வசந்தகரனாகொட இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரும்; அவரது மனைவி ஸ்ரீமதி அசோக கரனாகொடவிற்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வசந்தகரனாகொட பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என அரச சார்பற்ற அமைப்புகளும் சுயாதீன விசாரணையாளர்களும் பதிவுசெய்த குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles