முன்னாள் சிரேஷ்ட DIG பிரியந்த ஜயகொடிக்கு பிணை

0
6

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி, கண்டி நீதவான் நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகக் போலியான முறைப்பாட்டை வழங்கியமை தொடர்பில் ராகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஜூலை 28ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

அதன்படி, சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்குச் சென்ற மஹர நீதவான், சந்தேக நபரை நேற்று (6) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

கெஹல்பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகக் கூறி அவர் இந்த போலி முறைப்பாட்டை அளித்திருந்தார். 

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போது இது போலி முறைப்பாடு என்பது தெரியவந்துள்ளது.