முன்னாள் சுகாதார அமைச்சர் உயிரிழப்பு

0
153

மின்தூக்கி உடைந்து கீழே விழுந்ததில், படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பீ.சிறில் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தனது வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்தூக்கியின் உதவியுடன் மூன்றாவது மாடியில் புதிதாகச் சேர்த்தலைப் பார்வையிடுவதற்காக, தனது சாரதியுடன் மேல் தளத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, மின்தூக்கி உடைந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் உயிரிழந்துள்ளார்.