முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள் விஜயமாக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார்.
இன்று வருகைதரும் அவர், நாளையும், நாளை மறுதினமும் யாழில் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
சமகாலத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும், நீண்ட காலமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பிலும் பல்வேறுபட்ட தரப்பினரை மைத்திரிபால சிறிசேன இவ்விஜயத்தின் போது சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அதனடிப்படையில் இன்று காலை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பு ஆயர் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து ஆரியகுளம் ஸ்ரீநாக விகாரை, நல்லூர் கந்தசுவாமி ஆலயம், யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல்களில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
இந்து மத தலைவர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. இன்று மாலை கோண்டாவில் ஆடை உற்பத்தி நிலையத்தையும் மைத்திரிபால சிறிசேன, திறந்து வைக்கவுள்ளார்.