முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று இந்தியாவிற்கு விஜயம்!

0
9

நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்காக எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் 

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் தற்போது மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

விசேடமாக ஆசிய பிராந்தியத்திலுள்ள காரியாலயத்தில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அவர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து செல்கின்றனர். 

தங்களுக்கு தேவையான நபர்களையும் அமைப்புகளை ஊக்கப்படுத்தி வருவதுடன், இலங்கை அவர்களது இலக்காக மாறியுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை விசேட உலகளாவிய நிகழ்வுகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியாவின் புது டெல்லிக்கு செல்லவுள்ளார்.