முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில், அனுமதி பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்ற இருவர் கைது

0
123

அனுமதி பத்திரமின்றி, டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக, இரண்டு சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில், நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார், இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது, அனுமதி பத்திரமின்றி, கிரவல் மற்றும் மணல் ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டதுடன், டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.