முல்லைத்தீவு விமானப் படை முகாமில் விமானப் படை வீரரின் சடலம் மீட்பு!

0
135

முல்லைத்தீவில் விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகலைச் சேர்ந்த 26 வயதுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார். உயிரிழந்த சிப்பாயின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.