



முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் கௌரவிக்கப்பட்டனர். 150 வரையான மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பதற்காக அழைத்து வரப்பட்ட போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள படைமுகாமில் இருந்த படையினர் காணொளி எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.