மூத்த வானொலிக் கலைஞர் விமல் சொக்கநாதன் காலமானார்!

0
182

இலங்கை வானொலியில் இருந்து இலண்டன் பி.பி.சி வரை அறிவிப்பாளராக பணியாற்றிய விமல் சொக்கநாதன், லண்டனில் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
வானொலிக் கலைஞரான விமல் சொக்கநாதன், ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர்.
சிறுவர் மலர் நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். இலங்கை வானொலியில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றிய இவர், பிபிசி தமிழோசையிலும் அறிவிப்பாளராக இருந்தார்.
விமல் சொக்கநாதன் எழுதிய ‘லண்டனில் இருந்து விமல்’ என்ற நூல் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.