மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு தமது சம்பளத்திலிருந்து இந்திய மதிப்பில் 50,000 ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கவுள்ளதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காளிசெட்டி அப்பலா நாயுடுவின் இந்த அறிவிப்பு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் மாநிலங்களின் மக்கள் தொகை குறைந்து வருவதாக அண்மையில் வெளியாகியிருந்த தகவலையடுத்தே காளிசெட்டி அப்பலா நாயுடு இதனைக் கூறியுள்ளார்.