மூளாயில் புல் மேய்ந்த மாட்டின் காலை வெட்டிய விசமிகள்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு.

0
144

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முன்கோடை பகுதியில் காணியொன்றினுள் புல்மேய்ந்த மாட்டின் கால் துண்டாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது  நேற்றுறைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் முன்கோடை பகுதியில் காணியொன்றில் மேய்சலிற்காக நின்ற பசு மாட்டின் பின் கால் ஒன்றும் மற்றைய காலில் வெட்டுக்காயமும் ஏற்படும் வகையில் விசமிகளால் மாடு தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் உரிமையாளரால் மீட்கப்பட்டுள்ளது.இதனையடுத்து மாடு இறக்கும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் எதுவித உணவும் உட்கொள்ளாமல் இருப்பதாகவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாட்டின் உரிபையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக தெரிவித்தனர்.

குறிப்பாக பசு மாட்டின் உரிமையாளர் வறுமைக்கோட்டிற்குட்பட்டவராகவும் குறித்த பசுமாட்டின் மூலம் பெறப்படும் பசுப்பாலினை விற்பனை செய்வதே ஜீவனோபாயமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்ந நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் குறித்த பசு மாட்டினை பார்வையிட்ட நிலையில் பொலிசாரிடம் முறையிட்ட பொழுதும் இன்னும் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரையவில்லை என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதாகாரி வாக்குமூலத்தை பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தார் இதனையடுத்து சங்கானை பிரதேச செயலரிடமும் இது குறித்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டதோடு வட்டுக்கோட்டை கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு தொடர்புகொண்டே உடனடி மருத்துவ வசதிகளை முன்னெடுக்குமாறும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை கால்நடை வைத்திய அதிகாரி சிகிச்சைகளை மேற்கொண்டார்

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் விலங்குகள் மீதான வன்முறை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற நிலையில்  இதற்குரிய சட்டநடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கவேண்டும் இவ்வாறான வாயில்லாத பிராணிகள் மீதான வன்முறையை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார் இதன் பொழுது வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.