மேலும் அதிகளவான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு

0
123

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வற் வரியானது, சுகாதாரத்துறைக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில், பல பொருட்களுக்கு புதிதாக 18 வீத வரி விதிப்பது, பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

அம்புலன்ஸ்கள், மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களான ஊன்றுகோல், செவிப்புலன் கருவிகள் ஆகியவை, ஜனவரி முதல் புதிய வரிக்கு உட்பட்டது.

‘சுகாதாரத்துறையின் மீது தேவையற்ற சுமைகளை சுமத்துவதன் மூலம், நோயாளர்களுக்கு வழங்க வேண்டிய நன்மைகள் தொடர்பில் பிரச்சினைகள் உருவாக்குகின்றன.

இதனால், நாட்டின் சுகாதாரத்துறை, நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்.

‘இறுதியில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அந்த மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.’

அத்துடன், வரி அதிகரிப்பு காரணமாக, மேலும் அதிகளவான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.