மேலும் 13 மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை

0
173

மேலும் 13 மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.

மேற்படி மாவட்டங்களுக்கு தலா 25,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 50,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி மாவட்டங்களுக்கு சைனோபாம் தடுப்பூசிகளே வழங்கப்படவுள்ளன.