மேல் மாகாண சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

0
111

மேல் மாகாண சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தள்ளனர்.

மேல் மாகாணத்திற்குட்பட்ட வைத்தியசாலைகளில் எதிர்வரும் 26ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் சேவைக்கு அமைவாக சுகாதார நிபுணர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு வலியுறுத்தி மேற்படி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் வரும் 26ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய, பணிப்பகிஷ்கரிப்பின் பின்னரும் தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.