மொடல் அழகிகள் தேவைப்படுவதாக குறிப்பிட்டு வட்ஸ்அப்பினூடாக தகவல் வழங்கி படாசாலை மாணவியர் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்ட 19 வயதுடைய உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவனொருவர் குற்றவியல் விசாரணைத் திணைக்கள கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 16ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாணவர் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்திலுள்ள முக்கிய பாடசாலையில் கல்விகற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள சாதாரணதர மற்றும் உயர்தர மாணவியர்களிடமே இவ்வாறு புகைப்படங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
இலத்திரனியல் ஊடகமொன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவத்தில் சந்தேகநபரான பாடசாலை மாணவன் பிரபல்யமான மொடல் அழகிகளின் பெயர்களில் போலி வட்ஸ்அப் கணக்கொன்றை உருவாக்கி மொடல் அழகிகளாக விரும்பும் யுவதிகளுக்கு அதுகுறித்து அறிவித்து அவர்களுடன் தகவல் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Home முக்கிய செய்திகள் மொடல் அழகிகள் தேவையெனக் கூறி 16 மாணவியரின் நிர்வாண படங்களைப் பெற்ற பிரபல பாடசாலையின் உயர்தர...