மொனராகலையில் மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி ; சந்தேக நபர் கைது

0
24

மொனராகலை, சிறிபுரயாய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்தவர் மொனராகலை, ஒக்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார். 

இவர் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக காணி ஒன்றை சுற்றி சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்தவரின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.