அலுத்கம மொரகல்ல கடலிலிருந்து சுமார் 200 கிலோகிராம் நிறையுடைய மிதவையொன்றை மீட்டுள்ளதாக அலுத்கம சுற்றுலா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருவளை வெளிச்சவீடு மற்றும் மொரகல்ல பவளப் பாறைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மிதவை மிதப்பதைக் கண்டு கடற்றொழிலாளர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உரிய இடத்துக்கு விரைந்த பொலிஸார் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் மிதவையைக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மிதவை, இலங்கைக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் மிதவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மிதவை தொடர்பில் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இரசாயன பகுப்பாய்வை மேற்கொள்ளவுள்ளது.