மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள், கப் மற்றும் காரில் மோதி உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரிய கொழும்பு பிரதான வீதியின் போரே சந்தி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.