யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார
வேலியில் சிக்கி முதியவர் பலி

0
147

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்;ட இருநூறுவில், பாவக்கொடிசேனை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலைக்குடா கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 71 வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

உயிரிழந்தவர் நண்பர் ஒருவரின் தோட்டத்தினை பாதுகாக்கும் பொருட்டு யானைகளுக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்தாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைக்கும்
படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.