யாழில்இடம்பெறும் மீற்­றர் வட்­டி தொடர்­பில் தக­வல்­வழங்க கோரிக்கை!

0
225

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் மீற்­றர் வட்­டிக்­குப் பணம் கொடுப்­பது, வட்டி கோரி மிரட்­டு­வது போன்ற சம்­ப­வங்­கள் தொடர்­பான தக­வல்­க­ளைப் பொது­ மக்­கள் வழங்கவேண்­டும் என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஜெகத் விஷாந்த தெரி­வித்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் இவ்­வா­றான சம்­ப­வங்­கள் அதிகம் நடை­பெ­று­கின்­றன என்று தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்ளன. வட்­டிக்­காக சொத்­துகளை மிரட்­டிப் பறிக்­கும் சம்­ப­வங்­க­ளும் நடக்­கின்­றன என்று கூறப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான சம்­ப­வங்­கள் தொடர்­பா­கப் பொது­மக்­கள் தக­வல்­களை வழங்­கி­னால் துரி­த­க­தி­யில் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும். பொது­மக்­கள் எவ்­வித அச்­ச­மும் இன்­றி தக­வல்­களை யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள எனது அலு­வ­ல­கத்­திலோ அல்­லது எனக்கோ தெரி­விக்க முடி­யும் என்­றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் தெரி­வித்­துள்­ளார்.