அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5 இடங்களிலிருந்து ‘பாசத்திற்கான யாத்திரை’ இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் வடபகுதிக்கான யாத்திரை இன்று நல்லூர் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமானது.
தொடர்ந்து யாழ்ப்பாண நகரை வந்தடைந்து யாழ்ப்பாண நகரில் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு நாட்டின் 5 இடங்களிலிருந்து 19ஆம் திகதி ஆரம்பமாகும் ‘பாசத்திற்கான யாத்திரை’ 21ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளது.