யாழில் இடம்பெற்ற யாழ் சமுக செயற்பாட்டு மையத்தின் மகளிருக்கான தினம்!

0
186

‘ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக சமத்துவத்தை உறுதி செய்வதுடன் பெண்களின் வலுவூட்டலை மேம்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில்,
யாழ் சமுக செயற்பாட்டு மையத்தின் மகளிருக்கான தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன்போது வடமாகாணத்தில் சாதித்த 11 சாதனைப் பெண்கள் கௌரவிக்கப் பட்டனர்.

நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாதசுந்தரன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் இ.சுரேந்திரகுமார், சட்டத்தரணி மாதுரி நிரோசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.