யாழில் 68 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார்
யாழ் மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது இன்று காலை காலையிலிருந்து தற்போது வரை யாழில் 68.1மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் தெரிவித்தார்
குறித்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவவோடு தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்