யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் நோய் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்களாக சேர்க்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 5 நாள் காய்ச்சலுடன் சேர்க்கப்பட்டு பின்னர் நோயின் தீவிர நிலை உணரப்பட்டு யாழ். போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் அந்த இளைஞன் உயிரிழந்தார்.