யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடுஇதில் சிறுமி ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார் கடுங்காற்றின் தாக்கத்தின் காரணமாக வேலணை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு
ஏனைய பிரதேச செயலர் பிரிவில்
60வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் சிறு தொழில் முயற்சியாளர்கள் ஒன்பது பேர் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் அனைத்து விவரங்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்
வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றுடன் கூடிய காலநிலையினால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.