யாழில் சிமதானம்! : சாரணர்கள் பங்கேற்பு!

0
9

ஸ்ரீலங்கா சாரணர் சங்க யாழ்ப்பாண மாவட்ட சாரணர் கிளையினரால், இன்று யாழ்ப்பாணம் – கோட்டைப் பகுதியில் ‘தூய்மைப்படுத்தும் திட்டம்’ முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை மற்றும் காங்கேசன்துறை சாரணர் மாவட்ட கிளைகளின் பங்குபற்றுதலுடன். யாழ்.மாவட்ட சாரணர் கிளை பதில் ஆணையாளர்; எம்.பிரதீபன் தலைமையில் தூய்மைப்படுத்தும் திட்டம் நிகழ்வு இடம்பெற்றது.

தூய்மையான மற்றும் பசுமையான சூழலுக்காக ஒன்றிணைவோம் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் – கோட்டைப் பகுதியில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக 512 படைப்பிரிவு கொமாண்டர் கேணல் குணரத்ன, யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜெயசிங்க,யாழ் நகராட்சி ஆணையர் எஸ்.கிருஷ்ணேந்திரன் மற்றும் சாரணர்கள் கலந்துகொண்டனர்.