யாழ்ப்பாணம், நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பதைத் தடை செய்யுமாறு கோரி, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் நிராகிக்கப்பட்டுள்ளதுடன் சில நிபந்தனைகளுடன் யாழ்ப்பாணம், நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் நினைவேந்தலை முன்னெடுக்கலாம் என நீதவான் அறிவித்துள்ளார்.