யாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு!

0
143

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரே, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே, இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.