யாழில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் கைது செய்யப்படுவர்!டி ஐ ஜி,

0
131

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிசாரின் கடமை எனவே பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்

மேலும் யாழ் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிசார்  பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்

 தெல்லிப்பளையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்வன்முறை சம்பவத்துடன்  தொடர்புடையவர்கள் பொலிசாரால்    கைது செய்யப்படுகின்றார்கள்

 நேற்று முன்தினம் தெல்லிப்பளையில் இடம்பெற்ற சம்பவம் போல  யாழ்ப்பாண மாவட்டத்தில்அவ்வாறானசம்பவங்கள்  இனியும் இடம்பெற அனுமதிக்க முடியாது

 எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை 48 மணி நேரத்திற்குள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவினர் இணைந்து சந்தேக நபர்களையும் சம்பந்தப்பட்ட வாகனத்தினையும்  கைது செய்துள்ளார்கள் 

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை  சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுவோர்   பொலிசாரால்  தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள் 

சில குழுவினரிடையே 

இருந்துவரும்  பகைமையின் காரணமாகவே தற்போதைய வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது 

குறிப்பாக தெல்லிப்பளை சம்பவம் கூட ஏற்கனவே இரு குழுக்களுக்கிடேயே உள்ள  முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் முகமாகவே அந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது

அதே போல யாழ்மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிசாரின் கடமை எனவே பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்

பொதுமக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் போலீசார் தொடர்ச்சியாக  செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்