யாழில் பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி களத்தில்.

0
424

யாழில் பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி களமிறக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினை  கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணிப்போரை  கண்காணிப்பதற்காக 
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் பெண் போலீசாரையும் உள்ளடக்கிய போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது 

யாழ்ப்பாண குடா நாட்டின் முக்கிய வீதிகளில் வீதிகளில்  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி பயணிப்போரை வழிமறித்து சோதனை யில் ஈடுபடுவதோடு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்போர் எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இதேவேளை விமானப்படையின் உதவியுடன் டோன் கேமராக்கள் மூலமும் வீதியில் பயணிப்போர் கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.