யாழில் விடுமுறை தினத்தில் மதுபானம்விற்ற மூன்றுஇடங்கள் பொலிசாரால் முற்றுகை! மதுபான போத்தல்களும் மீட்பு,
போயா விடுமுறை தினமாகிய இன்றைய தினம் யாழ்ப்பாண. நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றமூவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியாவசியின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண மாவட்ட போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி கலட்டி மற்றும் முலவை சந்திப்பகுதியில் நடாத்திய தேடுதலின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு
117 கால் போத்தல்களும் 9 பெரிய சாராயப் போத்தல்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.