யாழ்ப்பாணத்தில் ‘எழில் மிகு கிராமம்’ வேலைத்திட்டம்!

0
189

யாழ்ப்பாணத்தில், ‘எழில் மிகு கிராமம்’ வேலைத்திட்டம், வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சினால், எதிர்வரும் 18 ஆம் திகதி, கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை முன்றலில் ஆரம்பிக்கப்படும் என, வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நளாயினி இன்பராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள, அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
காங்கேசன்துறை வீதியில் இருந்து ஆரம்பித்து செம்மணி வீதி வரை முடவடைகின்ற, 4.12 கிலோ மீற்றர் நீளமான, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, கல்வியங்காடு – கொக்குவில் ஆடியபாதம் வீதியில், அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் பொறியிலாளர் எஸ்.சிவநேசன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் ஆகியோரும் பங்கேற்றனர்.