யாழ்ப்பாணம் அல்வாயில் வயோதிபரின் சடலம் மீட்பு

0
202

யாழ்ப்பாணம் அல்வாய் வடமத்தி, அல்வாய் மாவிலங்கடி வீதியிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வேதார்வளவு, வியாபாரிமூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சேதுராமலிங்கம் என்ற 81 வயது வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் மாவிலங்கடி வீதியில் விழுந்து கிடந்ததை கண்ட இளைஞர் ஒருவர் அவரை எழுப்ப முற்பட்டவேளை அவர் அசைவற்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அதனையடுத்து பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.